உலகப்படத்தினை பொறுத்தவரை புவியியல் மாணவர்களுக்கு முக்கியம் பெற்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது. இதில எந்த ஒரு பௌதீக மற்றும் பண்பாட்டு அம்சங்களை உலகப்படத்தில் குறித்து காட்டுவதற்கு உரிய நிறங்கள் மிகவும் அவசியமானதாகும். படங்களில் மிகவும் நிறங்கள் ஐந்து காணப்படுகின்றது. அவையாவன மண்ணிறம், சிவப்பு, நீலம், கறுப்பு, பச்சை போன்றனவாகும்.
மலைகளினை குறித்து காட்டுவதற்கு மண்ணிறம் பயன்படுகின்றது. குறித்த பின்பு மலையின் போக்குக்கு அமைவாக அதன் பெயரையும் வேண்டும். சமவெளிகள் நிறத்தினால் அடையாளப்படுத்தப்படும். மேட்டுநிலங்கள் யாவும் மஞ்சள் நிறத்தினால் அடையாளப்படுத்தப்படும்.
நீர்நிலைகளினை எடுத்துக்கொண்டால் அவை நீல நிறத்தினால் அடையாளமிட்டு காட்டப்படும். குறிப்பாக சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள்,நீர்வீழ்ச்சிகள் போன்றன நீல நிறத்தினால் குறித்து காட்டப்படும். இதுதவிர புல்நிலங்கள் பச்சை நிறத்தினால் குறித்து காட்டப்படும்.
பாலைவனங்களை எடுத்துக்கொண்டால் அவை மண்ணிறத்தாலும், மற்றும் தேசிய பூங்காக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றனவும் மண்ணிறத்தினால் அடையாளமிடப்படும். நீரிணையினை எடுத்துக்கொண்டால் ------ என்ற குறியீட்டு விளக்கம் மூலம் நீல நிறத்தினால் அடையாளமிடப்படும்.
நகரங்கள், வீதிகள், புகையிரத வீதிகள் ஆகியன சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தினால் அடையாளமிடப்படும். நகரங்கள் சிவப்பு புள்ளி மூலம் குறித்து கட்டப்படும். வீதிகள் ----- மூலம் அடையாளமிடப்படும். நாடுகளினை அடையாளப்படுத்தி கொள்ள சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகின்றது.
இதுதவிர ஏரிகள், ஓடைகள், நீர்த்தேக்கங்கள் ஆகியன நீல நிறத்தினாலும், காடுகள் பச்சை நிறத்தினாலும் அடையாளமிடப்படும். கடல்கள், சமுத்திரங்கள் நீல நிறத்தினால் குறிக்கப்படும் அதேவேளை அவற்றின் மத்தியில் பெயர்கள் குறிப்பிடப்பட வேண்டும்.


No comments:
Post a Comment